இடம் : மானூர், பழனி.
கரும்பு சாறு பருகலாம் வாங்க என்று எனது நண்பர் சசிக்குமார் அவரது கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்றபோது எனது அலைபேசியில் எடுத்த புகைபடங்கள் தான் இவை ! சற்று ஆச்சர்யத்துடன் கரும்பு சாறு பருகிவிட்டு இதை ஒரு வலைப்பதிவாக்கலாமே என்று ஒரு எண்ணம் தோன்றியது !
தமிழர்களின் பண்டிகைக்கால உணவான சர்க்கரை பொங்கல் தயாரிக்க உதவும் மண்டைவெல்லம் எப்படி தாரிக்கிறார்கள் என்பதை நேரிடையாக கண்ட மகிழ்ச்சியில் புகைப்படம் எடுக்க துவங்கினேன் . இந்த புகைபடங்கள் அனைத்தையும் எளிமையான முறையில் நான் வரிசைபடுத்தி தரவேற்றம் செய்துள்ளேன் . இந்த படங்கள் விளக்கவுரை இல்லாமலேயே எவ்வாறு மண்டைவெல்லம் தயாரிக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் என நம்புகிறேன் .
இந்த கரும்பு (நாட்டு கரும்பு என்று கூறுவார்கள்) கடிப்பதற்க்கு சற்று கடினமாகத்தான் இருக்கும் ,மற்றும் சீனி ,மண்டைவெல்லம் தயாரிப்பதற்க்கு பெரிதும் உபயோகப்படுத்தப்படுகிறது .
மேலே உள்ள சாறு பிழியும் இயந்திரத்தின் மூலம் கரும்பு சாறு வடிகட்டப்பட்டு ,அதே இயந்திரத்தின் மூலம் குழாய் வழியாக சேமிப்பு தொட்டிக்கு அனுப்பப்படுகிறது.
இந்த அகன்ற பாத்திரத்தில் தான் கரும்புசாறு ஊற்றப்பட்டு காய்ச்சப்படுகிறது.
அந்த பெரிய கடாய் அளவிற்கு அடுப்பு மண்ணால் உருவமைக்கப்பட்டுள்ளது.
எரிபொருளாக கரும்பின் சக்கையையே உபயோகப்படுத்துகிறார்கள் .
பாகு நிலையை துரிதப்படுத்த சில வினையூக்கிகளுடன் ,சுண்ணாம்பும் கலக்கப்படுகிறது .
தேவையான பாகு நிலையை அடைந்தவுடன் ,கொதிநிலையில் அந்த அகன்ற கடாய் கயிற்றின் உதவியுடன் கீலே படத்தில் உள்ளவாறு மற்றொரு பலகையாலான உலர்த்தும் கலனுக்கு மாற்றப்படுகிறது.
பின்விவரம் :
வெள்ளை நிற சட்டை அணிந்திருப்பவர் நண்பர் சசிகுமார் .
சூடான ,பாகு நிலையில் உள்ள இதனை சற்று குளிர்விக்கிறார்கள். இதனை கெட்டிப்படுத்துவதர்க்காக இந்த பாகுடன் சூப்பர் பாஸ்பெட் ,மற்றும் சில வினையூக்கிகள் சேர்க்கப் பட்டு துரிதப்படுத்துகிறார்கள் .
பதினைந்து நிமிடங்களில் பாகு நிலையில் இருந்து இது திட நிலைக்கு மாறுகிறது.
இப்பொழுது பத்து நிமிடங்கள் வரை நன்றாக உலர்த்தப்படுகிறது .
பிசுபிசுப்பான மாவு நிலையில் இதை துணியில் எடுத்து உருண்டை பிடிக்கிறார்கள். உருண்டை பிடிக்கும் அதை நேரத்தில் கரும்பு சாறு கொதிக்க வைக்கப்படுகிறது.
பின்விவரம் :
நீல நிற கட்டம் போட்ட சட்டை அணிந்திருப்பவர் நண்பர் சசிகுமாரின் தந்தை.











